தஞ்சாவூரில் பள்ளி மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு, ஆர்வத்துடன் பள்ளி மாணவர்கள் வருகை

1225

கொரனோ தொற்றால் தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 19 மாதங்களாக மூடப்பட்டிருந்தன இந்நிலையில் தமிழகத்தில் கொரனோ தொற்று குறைந்து வருவதால் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் வழக்கம்போல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 1612 பள்ளிகள் திங்கள் அன்று வழக்கம் போல்  திறக்கப்பட்டன, இதனையடுத்து  தமிழக முதல்வர் ஆணைப்படி தஞ்சாவூர் சீனிவாசபுரம் லட்சுமி நாராயணா தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் காலையில் உற்சாகத்துடன் வருகை தந்தனர்,இந்நிலையில் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் அவர்களுக்கு ஆர்வம் ஊட்டும் வகையிலும் முன்னாள் அமைச்சரும் தஞ்சை தொகுதி எம்பியுமான எஸ்.எஸ். பழநிமாணிக்கம் பள்ளி மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றார்,பின்னர் அவர்களுக்கு புத்தகங்கள், சீருடை ஆகியவற்றை வழங்கினார்,மேலும் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை ஆசிரியர்கள் இன்முகத்துடன் வரவேற்று இனிப்பு வழங்கி அவர்களுக்கு கிருமி நாசினி,முகக்கவசம் மற்றும் வெப்பமானி  பரிசோதனை, ஆகியவை செய்து பள்ளிக்கு அனுமதித்தனர், பின்னர் மாணவர்கள் உற்சாகமாக கல்வி பயின்றனர்