தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தலைமையில் தஞ்சை அதிமுக அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதில் தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும் பொய் வழக்கு போடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்பாட்டத்தில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் ஆவின் தலைவர் காந்தி பகுதி செயலாளர்கள் அறிவுடை நம்பி மெடிக்கல் சரவணன் புண்ணியமூர்த்தி ரமேஷ் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம் மகளிரணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்