தஞ்சை மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கவும்

5046

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டிற்கான சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 முதல் 40 வயதிற்கு உட்பட்ட விதவை,கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்,மாற்றுத்திறனாளி மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தையல் இயந்திரம் பெற விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்: 1.வருமானச் சான்று ரூ.72,000த்திற்குள் இருத்தல் வேண்டும் 2.பிறந்த தேதிக்கான வயது சான்று நகல் அல்லது கல்வி சான்று நகல் 3.விதவை சான்று நகல் 4. சாதிச் சான்று நகல் 5.கணவரால் கைவிடப்பட்டவராயின் அதற்கான சான்று நகல் 6. மாற்றுத் திறனாளி சான்று நகல் 7. குறைந்தபட்சம் 6 மாத காலதையல் பயிற்சி பெற்ற சான்றின் நகல் இணைக்கப்பட்ட வேண்டும். 8. குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை நகல் 9. பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படம் ஆகிய மேற்கண்ட ஆவணங்களுடன் அவரவர் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் சமூக நல விரிவாக்க அலுவலர் / ஊர் நல அலுவலர் ஆகியோர்களை அணுகி, இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார் மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்.04362-264505 தொடர்பு கொள்ளலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − = 17