தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது, அதிமுக கட்சி எதிர்கட்சியாக உள்ளது இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி ஏழு இடங்களிலும் அதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது, தஞ்சாவூரில் திமுக டிகேஜி நீலமேகம் திருவையாறு துரை சந்திரசேகரன் பாபநாசம் ஜவாஹிருல்லா கும்பகோணம் அன்பழகன் திருவிடைமருதூர் கோவி செழியன் பட்டுக்கோட்டை அண்ணாதுரை பேராவூரணி அசோக்குமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர், ஒரத்தநாட்டில் மட்டும் அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றுள்ளார்,வைத்திலிங்கம் தற்போது எம்எல்ஏ ஆக வெற்றி பெற்று உள்ளதால் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வார் என்பது தெரிய வருகிறது