தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீபெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவில் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாய் திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் சிறந்து விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம்,ஆனால் கடந்த ஆண்டு கொரனோ தொற்று காரணமாக விழா நடைபெறவில்லை ஆனால் இந்தாண்டு கடந்த 9ந்தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கி தினமும் மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு கோவில் வளாகத்தில் நடைபெற்று வந்தது,கொரனோ தொற்று நடவடிக்கையால் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோவில் வளாகத்தின் உள்ளேயே மிகவும் எளிய முறையில் நடைபெற்றது.ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளிதெய்வானை, ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர்,ஸ்ரீநீலோத்பலாம்பாள், ஸ்ரீதியாகராஜர், ஸ்கந்தர், ஸ்ரீகமலாம்பாள் ஆகிய சுவாமிகள் அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது மேலும் ஸ்ரீதியாகராஜசுவாமி, கமலாம்பாள் சுவாமிகள் எழுந்தருளி சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டு மங்கல இசைக்கருவிகள் முழங்க தேரோட்டம் நடைபெற்றது.