தஞ்சாவூர் மாவட்டத்தில் 73.93 % வாக்கு பதிவு

1286

தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும் எம்பியுமான எஸ்.எஸ். பழநிமாணிக்கம் மற்றும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வாக்குபதிவு செய்தனர், தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குபதிவு நடைபெற்றது,மாவட்டத்தில் மொத்தம் 2886 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வாக்களித்தனர், தஞ்சை சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சரும் எம்பியுமான எஸ்.எஸ். பழநிமாணிக்கம் தனது குடும்பத்தினருடன் சீனிவாசபுரம் வாக்குசாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார், அதைப்போல் திமுக வேட்பாளர் டிகேஜி நீலமேகம் வடக்குவீதி பகுதி வாக்குசாவடி மையத்திலும்,அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி மானம்புசாவடி பகுதியிலும் வாக்கினை பதிவு செய்தனர், மேலும் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் நாணயகாரசெட்டிதெரு வாக்குசாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.கொரனோ தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தனிமனித இடைவெளியுடன் முககவசம் அணிந்து கொண்டு தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர், தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 73.93% பேர் வாக்களித்துள்ளனர், வாக்கு எண்ணிக்கை மே 2ந் தேதி நடைபெறும்.