திருவையாறு சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து மத்திய அரசின் வக்பு வாரிய உறுப்பினர் முனாவரி பேகம் தேர்தல் பிரச்சாரம் செய்தார் அப்போது 2014ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றவுடன் இஸ்லாமியர்களுக்கு திட்டங்கள் அதிகளவு கொடுக்கப்பட்டுள்ளன கடந்த ஐந்து ஆண்டுகளாக வக்பு வாரியம் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆய்வு செய்து வருவதாகவும் 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக் காலத்தில்தான் வக்பு சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளன 2014க்கு பிறகு பாஜக அரசு பொறுப்பேற்றபோது 50 சதவீத வக்பு சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன முத்தவல்லிகளை மிரட்டி திமுகவினர் சொத்தை அபகரித்துள்ளனர்,50 ஆண்டு காலமாக வக்பு சொத்துக்களை பற்றி பேசுவதற்கு ஆள் இல்லை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முஸ்லிம்களைப் பற்றி பேசவில்லை என்றும் இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கியை பயன்படுத்தக்கூடிய எதிர்க்கட்சிகளுக்கு இந்த முறை முஸ்லிம் மகளிர் பாடம் புகட்டுவார்கள் என்றும் முத்தலாக் சட்டம் வந்ததால் இஸ்லாமிய மகளிர்க்கு விடுதலை கிடைத்துள்ளது 2019 தேர்தலில் 66 சதவீத இஸ்லாமிய மக்களின் மகளிர் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன அதே போல் இந்த தேர்தலிலும் இஸ்லாமிய மக்களின் மகளிர் வாக்குகள் அதிக அளவில் பெறப்படும் என்றும் தெரிவித்தார் பிரசாரத்தின் போது வேட்பாளர் பூண்டி வெங்கடேசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் உடன் இருந்தனர்