திருவையாறு சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து வல்லம் புதூரில் நடிகை நமீதா பிரச்சாரம் செய்தார்,அப்போது திமுக சுயமரியாதை இல்லாத கட்சி பெண்களை மதிக்காத கட்சி,2ஜி ராஜா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அம்மாவை பற்றி இழிவாக பேசியது அதற்கு உதாரணம் என்றும் அதற்காக திமுகவை தோற்கடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் தாமரை மலரும் தமிழ்நாடு வளரும் எனவும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் குடும்பத் தலைவிகளுக்கு 1500 ரூபாய் பணம், இலவச கேபிள் இணைப்பு அரசின் இலவச கேஸ் சிலிண்டரில் நன்றாக பிரியாணி செய்து சாப்பிட்டு அரசின் இலவச கேபிளில் தொடர் பார்க்கலாம் எனக் கூறினார். மேலும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை என பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார் பிரசாரத்தின் போது வேட்பாளர் பூண்டி வெங்கடேசன் நிர்வாகிகள் முரளி கதிரவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்