தஞ்சை சட்டமன்ற தொகுதியில் போட்டியில் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், பின்னர் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசும் போது உங்களில் ஒருவனாக கேட்கிறேன் அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தங்களது பணிகளை சிறப்பாக செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார், பின்னர் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால்,பண்டரிநாதன் ஆகியோருடன் சென்று மத தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்