தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அப்போது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாகவும் குறிப்பாக அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இலவச சிலிண்டர், ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம் மற்றும் கேபிள் இணைப்பு ஆகியவை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார், மேலும் தமிழக முதல்வரைப் பற்றி தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும் எதிர்க்கட்சிகளுக்கு அரசியல் நாகரிகம் என்பது தெரியாது தனிமனித விமர்சனம் என்பது கூடாது என்பது இதற்கு முன்னால் இருந்த தலைவர்களின் பண்பு என்றும் ஆ ராசா பேசிய கருத்து தமிழ்நாட்டு மக்களை உலுக்கியுள்ளது முதலமைச்சரை பற்றி பேசியதற்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டார் பிரச்சாரத்தின் போது முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்