நலத்திட்டங்கள் தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்

1332

தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் அதைப்போல் தஞ்சை பாலாஜி நகர் முனிசிபல் காலனி டிபிஎஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் அப்போது பேசிய அவர் அதிமுக அரசின் நலத்திட்ட உதவிகள் மீண்டும் தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார் இப் பிரச்சாரத்தின் போது முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் பகுதி செயலாளர் சரவணன் நிர்வாகிகள் ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்