ஏழைகளுக்கு மோடி வீடு பாஜக பிரச்சாரம்

1235

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், அவருக்கு ஆதரவாக பாஜக மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அப்போது திமுக வேட்பாளர் மீது கடும் அதிருப்தி உள்ளது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை, பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசன் கொரனோ காலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் என்று தெரிவித்தார் மேலும் மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு பலன் அளிப்பதாக உள்ளது குறிப்பாக ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அதிகம் பேர் பயன் பெற்றுள்ளனர்,ஏழைகளுக்கு மோடி வீடு பணக்காரர்களுக்கு ஓட்டுவீடு என்று பொதுமக்கள் கூறுவதாக தெரிவித்தார், இப்பிரசாரத்தின் போது அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுப்ரமணியன்,ஒன்றிய செயலாளர் இளங்கோவன், செந்தில்குமார் பாஜக மாவட்ட செயலாளர் முரளி, கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்