தஞ்சை மாவட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் அதன்படி ஒரத்தநாட்டு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வைத்திலிங்கம் தஞ்சை தொகுதி அறிவுடை நம்பி திருவையாறு தொகுதி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அதிமுக அரசு விஞ்ஞான பூர்வமான முறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் புகார் பெட்டி வைத்துக்கொண்டு மனுக்களை வாங்கி வருவதாகவும் அந்த பெட்டியை எப்போதும் திறக்க முடியாது என்று குற்றம் சாட்டினார் மேலும் தான் ஒரு விவசாயி என்றும் ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி தெரியாது கோட் சூட் போட்டுக்கொண்டு விஞ்ஞான விவசாயியாக ஸ்டாலின் வருகிறார் அவர் போலி விவசாயி என்றும் குற்றம் சாட்டினார் இப்பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் வைத்திலிங்கம் அறிவுடை நம்பி பூண்டி வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.இதில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் பால்வள தலைவர் காந்தி பகுதி செயலாளர்கள் மெடிக்கல் சரவணன் புண்ணியமூர்த்தி ரமேஷ் பாஜக ஜெய் சதிஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்