நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளன,தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி தனது கட்சி நிர்வாகிகள் முன்னாள் மேயர் சாவித்திரிகோபால்,பால்வள தலைவர் காந்தி,பகுதி செயலாளர்கள் மெடிக்கல் சரவணன்,புண்ணியமூர்த்தி, ரமேஷ், வீரணன்,சண்முகபிரபு ஆகியோருடன் வந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுமணியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார், அதைப்போல் திருவையாறு சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசன் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மஞ்சுளாவிடம் தனது வேட்மனுவை அளித்தார். திருவையாறு தொகுதியில் திமுக,பாஜக கட்சிகள் வேட்புமனு செய்ய வந்ததால் அக்கட்சியினரின் தொண்டர்கள் கூட்டத்தால் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.