தஞ்சையில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய அதிமுக வேட்பாளர்கள்

742

2021 நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சி சார்பில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம்,தஞ்சாவூர் தொகுதியில் பகுதி செயலாளர் அறிவுடைநம்பியும் போட்டியிடுகின்றனர்,இந்நிலையில் மாசி மாத அமாவாசை தினமான நல்ல நாளில் தஞ்சை ரயிலடி பகுதியில் உள்ள மறைந்த அதிமுக நிறுவனத்தலைவர் எம்ஜிஆர், பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் பேரரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.முன்னதாக பேட்டியளித்த வைத்திலிங்கம்,ஒட்டுமொத்த மக்களின் ஆதரவும் அதிமுகவிற்கு உள்ளது,234 தொகுதியிலும் வெற்றி பெறுவோம், மாதத்திற்கு ரூ 1500, வருடத்திற்கு 6 சிலிண்டர் கொடுப்போம் என்று அறிவித்தோம் அதுதான் தேர்தல் அறிக்கையின் கதாநாயகன்,அதிமுக அறிவிக்க போகிற திட்டங்களை முன்கூட்டியே தெரிந்து ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்று தெரிவித்தார், இதில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால்,பால்வள தலைவர் காந்தி,பகுதி செயலாளர்கள் மெடிக்கல் சரவணன், புண்ணியமூர்த்தி,ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

68 − 62 =