தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திமுக அதிமுக கட்சிகள் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர், திமுக அதிமுக நேருக்கு நேர் தஞ்சை தொகுதியில் போட்டியிடுகின்றன, தஞ்சாவூர் தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்று அனைத்து தரப்பு அரசியல் தலைவர்களும் இந்த தொகுதியை உற்று நோக்குவர், அத்தகைய பிரபலமானது தஞ்சாவூர் தொகுதி,இந்நிலையில் தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு திமுக சார்பில் டிகேஜி நீலமேகமும், அதிமுக சார்பில் அறிவுடைநம்பியும் போட்டியிடுகின்றனர், திமுக வேட்பாளர் டிகேஜி நீலமேகம் 2019ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 33ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்ஏவாக ஆனார்,தற்போது மீண்டும் இத்தேர்தலில் போட்டியிடுகிறார், அதைப்போல் அதிமுக கட்சியில் போட்டியிடும் அறிவுடைநம்பி எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் என பதவி வகித்து தற்போது கரந்தை பகுதிகழக செயலாளராக உள்ளார், இருவருமே தொகுதியில் மிகவும் அறிமுகமானவர்கள், தஞ்சாவூர் தொகுதி திமுகவின் கோட்டையாக இருந்ததை முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி அதனை தகர்த்தார்,பின்னர் டிகேஜி நீலமேகம் மீண்டும் திமுகவை வெற்றி பெற செய்தார், தற்போது திமுக அதிமுக நேரடியாக மோதுகிறது,இதனால் தஞ்சாவூர் தொகுதி திமுகவா, அதிமுகவா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது, இதற்கான விடை மக்கள் கையில் பொறுத்திருந்து பார்ப்போம் மே மாதம் 2ந்தேதி வரை.