தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிமுக கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்

1676

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன,அதில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம், திருவையாறு,திருவிடைமருதூர்(தனி),ஒரத்தநாடு,பேராவூரணி ஆகும், இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி சார்பில் போட்டியிடுவோர்களின் பெயர்களை அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ளது, அதன்படி ஒரத்தநாடு தொகுதிக்கு அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், பேராவூரணி தொகுதி அதிமுக மாவட்ட அவைத்தலைவர் திருஞானசம்பந்தம், பாபநாசம் தொகுதி ஒன்றிய குழு உறுப்பினர் கோபிநாதன், திருவிடைமருதூர் தொகுதி ஒன்றிய துணை செயலாளர் யூனியன் வீரமணி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.