தமிழகத்தில் முதன் முறையாக குருவிற்கு நன்றி கடன் செலுத்திய மாணவர்கள்

1440

தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக்கல்லூரியின் மேனாள் முதல்வரும் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட் கல்லூரி நிறுவனரும், ஆயிரக்கணக்கான தமிழ் மாணவர்களை உருவாக்கியவரும், சென்னை பல்கலைக் கழகத்தின் இலட்சினையில் கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும் என்ற தமிழ்த்தொடரை இடம்பெறச் செய்தவரும் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆட்சிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் 30 ஆண்டுகாலம் தமிழ்மொழி வளர்ச்சிக்கும் மாணவர் நலனுக்கும் பாடுபட்டு தமிழுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தமிழறிஞர் பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தமிழகத்தில் முதன் முறையாக அவரிடம் கல்வி பயின்ற மாணாக்கர்கள் ஒன்றிணைந்து தங்களது ஆசானுக்கு நன்றி செலுத்தும் வகையில் முழுஉருவ வெண்கலச் சிலையை தஞ்சாவூர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில் திறந்தனர் இவ்விழாவில் பூண்டி புட்பம் கல்லூரி தாளாளர் துளசி ஐயா வாண்டையார் முன்னாள் அமைச்சரும் தஞ்சை தொகுதி எம்பியுமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் பழநி ஆதினம் சாது சண்முக அடிகளார் முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தனர் இந்நிகழ்ச்சியை இணை இயக்குநர்(ஒய்வு) குணசேகரன் தமிழ்த்துறை தலைவர்கள் தமிழ்மாறன் திராவிட ராணி உள்ளிட்ட மாணவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினர்