தனியார் துறை வேலை வாய்ப்பு ரெடி

1660

தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 13ந்தேதி அன்று பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (புதிய பேருந்து நிலையம் அருகில்) நடைபெற உள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றனர், இம்முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்தோர் , டிப்ளமோ, ஐடிஐ, பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ கல்வி தகுதிகளுக்குரிய வேலைநாடுவோருக்கு 2000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பினை அளிக்க உள்ளனர். எனவே விருப்பம் உள்ளவர்கள் பயோடேட்டா, கல்விச் சான்றுகள், ஆதார்அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முன் அனுபவம் சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.மேலும் விவரங்களுக்கு 04362-237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.