தஞ்சாவூரில் மாவட்டத்தில் முன் மாதிரியாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் கோவிசீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டார். நாடு முழுவதும் முன்கள பணியாளர்களுக்கு கொரனோ தடுப்பூசி போடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 19 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதைப்போல் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார் அப்போது கோவிசீல்டு தடுப்பூசியினை அவரும் போட்டுக் கொண்டார். முன்கள பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள தயங்க கூடாது அவை பாதுகாப்பானது என தெரிவித்த அவர் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 4700 தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் 150க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.