அப்பாவை நன்றி மறவாத மகள்கள்

1356

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் செல்வம்,இவருக்கு திருமணமாகி மூன்று மகள்கள் உள்ளனர், முதல் இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த நிலையில், எதிர்பாராத விதமாக செல்வம் கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார்,அவர் உயிரிழந்து எட்டு ஆண்டுகள் ஆகியும், அவரது இளைய மகள் திருமணத்தில் அப்பா செல்வம் இல்லாதது, அவரது குடும்பத்திற்கு வருத்தத்தை ஏற்படுத்தியது, மேலும் கடைசி மகளுக்கு மறையாத சோகமாகவும் இருந்துள்ளது, இதனையடுத்து மணமகளின் வருத்தத்தை போக்குவதற்காக ரூ 6 இலட்சம் செலவில், அவரது மூத்த சகோதரி புவனேஷ்வரி பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் சிலிக்கானை கொண்டு தந்தையின் முழு உருவ சிலையை வடிவமைத்து சகோதரிக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். இதைக் கண்ட மணமகள் லட்சுமி பிரபா மற்றும் அவரது உறவினர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உயிருடன் இல்லாத தன் தந்தையின் சிலைக்கு முன்பு மணமக்கள் மாலை மாற்றி தாய் தந்தையின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 3