நெற்பயிர் பாதிப்பை இரண்டு சக்கர வாகனத்தில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

1930

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா சோழபுரம் மேற்கு கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் பருவமழையின் காரணமாக சேதமடைந்ததை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேளாண்துறை மற்றும் வருவாய்த் துறையின் சார்பில் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு நடைபெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களில், எந்த ஒரு பதிவும் விடுபடாமல் பதிவு செய்யப்படுகிறதா என ஏற்கனவே பதிவு செய்த இரண்டு விண்ணப்பங்களில் பதிவுகளை ஆய்வு செய்து விண்ணப்பங்களில் இடம்பெற்றுள்ள விவசாய நிலத்தை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என அலுவலர்களிடம் தெரிவித்தார், அதன்படி சோழபுரம் கிராமத்தில் சத்தியமூர்த்தி என்ற விவசாயியின் நிலத்தை நேரில் பார்வையிடுவதற்காக இருசக்கர வாகனம் மூலம் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வாய்க்கால் பாதையில் பயணம் செய்து விவசாய நிலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்து உரிய இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் தெரிவித்தார். ஆய்வின்போது வேளாண் துறை துணை இயக்குனர் கோமதி வட்டாட்சியர் கணேஸ்வரன் உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்