வீட்டில் கோழி இருக்கிறதா? தடுப்பூசி போடுங்க

1309

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் வரும் 1ந் தேதி முதல் 14 ந் தேதி வரை கோழிக்கழிச்சல் தடுப்பூசி போடுவதற்கு இருவார கோழிக்கழிச்சல் தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்கள் கால்நடை பராமரிப்புத் துறையால் நடத்தப்பட உள்ளது, இதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி போடுவதற்கு தகுதியாக உள்ள கோழிகளுக்கு கோழிக் கழிச்சல் தடுப்பூசி போடப்படுவதால் பொது மக்கள் அனைவரும் இம்முகாமில் தங்களது கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.கோழிக் கழிச்சல் நோய் பாதிப்பால் கிராம பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்பதால் வருடந்தோறும் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப் படுகின்றன.இந்த ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2.92 இலட்சம் கோழிகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் அனைத்து கோழி வளர்ப்போர்களும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.