தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் ஈரப்பதத்தை குறைக்கும் வகையில் நெல் உலர்த்தும் இயந்திரம்

1184

தஞ்சாவூர் மாவட்டம்,ஒரத்தநாடு வட்டம் பொன்னாப்பூர் கிராமம், நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதத்தை குறைக்கும் வகையில் நெல் உலர்த்தும் இயந்திரத்தின் சோதனை ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறும்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 27 மி.மீ அளவு மழை பெய்துள்ளது, இந்த வருடம் ஜனவரி மாதத்தில் 295 மி.மீ மேல் மழை பெய்துள்ளது, இதனால் பல்வேறு இடங்களில் நெல் பயிர்கள் அதிகம் பாதிப்பு அடைந்துள்ளன, விவசாயிகள் அறுவடை செய்யும் நிலையில் பல்வேறு இடங்களில் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு முதன்முறையாக நெல் ஈரப்பதத்தை குறைத்திடும் வகையில் நெல் உலர்த்தும் இயந்திரம் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இந்த இயந்திரத்தின் கொள்ளளவு 2 மெட்ரிக் டன் அளவு உடையது. இரண்டு மணி நேரத்தில் இந்த இயந்திரம் 24 சதவீதம் முதல் 26 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல் கதிர்களை 18 சதவீதம் ஈரப்பதமாக கொண்டு வர வாய்ப்புள்ளது.இந்த சோதனை ஓட்டம் பரிசோதனை முழுமையாக வெற்றியடைந்தால் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விவசாயிகள் பயன்படும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்தார் இந்த ஆய்வில் முன்னோடி விவசாயிகள் பலர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 2 =