சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜர் தெலுங்கு மொழி கீர்த்தனைகளை பாடி உலகம் முழுவதும் அறியச் செய்தவர், ஸ்ரீதியாகராஜர் சுவாமிகளின் ஆராதனை விழா வரும் பிப்ரவரி மாதம் 1 மற்றும் 2ந்தேதி ஆகிய இரு நாட்கள் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது,இவ்விழாவினை முன்னிட்டு திங்கள் அன்று திருவையாறு காவிரி கரையில் ஸ்ரீதியாகராஜர் முக்தி அடைந்த அவரது இடத்தில் அவரது திருவுருவ சிலைக்கு பூஜை செய்து பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது, தியாகராஜர் சித்தியடைந்த பகுள பஞ்சமி தினமாகிய 2ந்தேதி அன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்கள் வந்திருந்து ஒன்று சேர பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடியும் இசைத்தும் தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் தியாகபிரம்ம மஹோத்ஸவ சபா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்