முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 104வது பிறந்த நாள் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

1169

அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்று மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று மக்கள் தலைவர் என்று அழைக்கப்பட்டார் இவரது பிறந்த நாளை அதிமுக கட்சியினர் மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் அதேபோல் தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் 104வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது தஞ்சை ரயிலடியில் உள்ள எம்ஜிஆரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு முன்னாள் எம்பி பரசுராமன் தலைமையில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம் ஆவின் தலைவர் காந்தி பகுதி செயலாளர்கள் அறிவுடை நம்பி மெடிக்கல் சரவணன் புண்ணியமூர்த்தி ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உறுதி ஏற்போம் என்று தெரிவித்து உற்சாகமாக கொண்டாடினர்