உலகப்புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாய ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப்பிரசித்தி பெற்று விளங்குகிறது,இக்கோவிலில் மஹா நந்தியெம்பெருமான் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார், இந்நிலையில் மகரசங்கராந்தியை முன்னிட்டு மஹாநந்திக்கு திரவியபொடி, மஞ்சள், தயிர், பால், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரமும் சிறப்பு தீபாரதனையும் காட்டப்பட்டது,அனைத்து வகை காய்கறிகள், பழங்கள், மலர்கள், லாடு, ஜாங்கிரி, மைசூர்பாகு, முறுக்கு உள்ளிட்ட இனிப்பு வகைகளை கொண்டு மஹாநந்தியெம் பெருமான் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். அலங்கரிக்கப்பட்ட மஹாநந்திக்கு தீபாரதனைகள், பூஜைகள் செய்யப்பட்டது, பின்னர் பசுமாடு அலங்கரிக்கப்பட்டு மஞ்சள்,சந்தனம், குங்குமிட்டு, மலர் தூவி, வேஷ்டி, சேலை,துண்டு போன்ற வஸ்திரங்களை போர்த்தி கோ-பூஜை வழிபாடும் நடத்தப்பட்டது.இந்த பூஜை சிறப்பு வழிபாடுகளில் ஏராளமான பொதுமக்கள்,பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.