வாயு மைந்தன் அனுமனுக்கு தஞ்சையின் வாயு மூலையில் அனுமனுக்கு என்று தனிப்பெரும் கோவிலை தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாபசிம்மன் கட்டினார்,மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வர பகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்,மூலை அனுமாரை அமாவாசை தினத்தன்று வழிபடுவது சிறப்பு,இந்நிலையில் மார்கழி மாத அமாவாசை தினம் மற்றும் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற மூலை அனுமார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது, அனுமனுக்கு திரவியபொடி, மஞ்சள்,பால்,சந்தனம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்து வடை மாலை சாற்றி மஹா தீபாரதனை காட்டப்பட்டது, இதில் ஏராளமான பொதுமக்கள்,பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.