பள்ளி மாணவர்களுக்கு காசுகளின் மதிப்பை தெரிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சாவூரில் உள்ள ஆனந்தம் சூப்பர் மார்கெட் சார்பில் 10பைசாவுக்கு 1கிலோ சர்க்கரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியது,நமது முன்னோர்கள் காலத்தில் காலனா,அரையணா,25காசு,50காசு என பயன்படுத்தி அந்த காசுகள் மதிப்பு இழந்துவிட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து 1ரூ,2ரூ என படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ2ஆயிரம் வரை பணத்தின் மதிப்பு உள்ளது, இந்நிலையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பழைய நாணயத்தை பற்றி தெரிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 10பைசா கொண்டு வந்தால் 1கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தனது பேஸ்புக்கில் பதிவிட்டனர், இதனையடுத்து இச்செய்தியை அறிந்த பள்ளி மாணவர்கள்,பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள்,பழைய 10பைசாவை தேடிக்கண்டுபிடித்து கடையில் கொடுத்து சர்க்கரையை வாங்கி சென்றனர்.இதுகுறித்து கடை உரிமையாளர்கள் முகமதுஅலியார்,ஜாகிர்உசேன் கூறும்போது லாபநோக்கம் இல்லாமல் அழிந்துவிட்ட பழைய நாணயங்களை பற்றி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே பொங்கல் பண்டிகை மற்றும் புத்தாண்டை இனிப்பாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் சர்க்கரையை வழங்கியதாக தெரிவித்தனர்.