தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா திருப்பாலத்துறையில் 400 ஆண்டுகள்; பழமையான தானிய களஞ்சியம் அமைந்துள்ளது,தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் திருப்பாலத்துறையில் சோழர் கால பாலைவனநாதர் சிவன் கோயில் உள்ளது, நாயக்க மன்னர்களின் காலத்தில் ரகுநாத நாயக்கரின் ஆசிரியர் கோவிந்த தீட்சிதர் மற்றும் அவரது தந்தை அச்சுதப்ப நாயக்கரால் இக்கோவிலில் தானிய களஞ்சியம் உருவாக்கப்பட்டுள்ளது, ரகுநாத நாயக்கர் 1600 மற்றும் 1634ஆண்டுக்கு இடையில் தஞ்சாவூரை ஆட்சி செய்தார்,கோவிலின் நுழைவாயிலுக்கு அருகில்,வயல்களில் அறுவடை செய்யப்படும் நெல்லை சேமிக்க தானிய களஞ்சியம் பயன்படுத்தப்பட்டது,வட்ட செங்கல் அமைப்பு 36 அடி உயரமும்,80 அடி அகலமும் கொண்டது, இக்களஞ்சியத்தின் அடிப்பகுதி வட்டவடிவிலும் மேல்பகுதி கூம்பு வடிவிலும் அமைந்துள்ளது, மேல்பகுதி மற்றும் நடுப்பகுதி மற்றும் கீழ்பகுதியில் மூன்று திறப்புகளை கொண்டுள்ளது,இதில் தோராயமாக 3000 கலம் தானியத்தை சேமிக்க முடியும்,மத்திய அரசின் தொல்லியல்;துறை சமீபத்தில் இக்களஞ்சியத்தை புதுப்பித்து வேலி அமைத்துள்ளது இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது தொல்லியல்துறை பழமையான இக்களஞ்சியத்தை பாரம்பரிய சின்னங்களாக அறிவித்து யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.