மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

1458

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி(IIT) ஐஐஎம்(IIM) ஐஐஐடி(IIIT)என்ஐடி(NIT)மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு 2020-21 ஆம் ஆண்டிற்கான புதியது கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மேற்கண்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ 2 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ-மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக மாணவர் ஒருவருக்கு ஆண்டிற்கு ரூ 2 லட்சம் வரை முதற்கட்டமாக 100 மாணவ மாணவியர்களுக்கு 2019-20ம் ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு தமிழக அரசு ஆணையிடப்பட்டுள்ளது,2020-21 கல்வியாண்டிற்கு புதியது கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது இயக்குநர் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்,எழிலகம் இணைப்பு கட்டடம்,2வது மாடி, சேப்பாக்கம், சென்னை-5 தொலைபேசி எண்: 044-28551462 இமெயில்:tngovtiitscholarship@gmail.com என்ற முகவரியில் அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்,மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்,கல்வி நிறுவனங்கள் சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து இயக்ககத்திற்கு 15.2.2021க்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.