தஞ்சாவூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்

1397

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் சிறப்பு பரிசு தொகுப்பாக ரூபாய் 2500 மற்றும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழுகரும்பு மற்றும் முந்திரி, திராட்சை,வேட்டி,சேலை உள்ளிட்ட பொருள்கள் தொகுப்பாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் காவேரி கூட்டுறவு சிறப்பு அங்காடியில் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை எம்பி வைத்திலிங்கம் தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் மனோகரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.தஞ்சை மாவட்டத்தில் 667941 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது இந்நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சாவித்திரிகோபால் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம் ஆவின் தலைவர் காந்தி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி மெடிக்கல் சரவணன் புண்ணியமூர்த்தி ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்