தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது பெருமாள் வீற்றிருக்கும் கோயில்கள் அனைத்திலும் வைகுண்டவாசல் திறப்பு எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது அதன்படி தஞ்சையில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பத்து நாட்கள் பகல்பத்து உற்சவம் நடைப்பெற்று வந்தது. அதனையொட்டி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு வெள்ளி அன்று அதிகாலை நடைப்பெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் வைகுண்டவாச பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். கொரானா தொற்று நடவடிக்கையால் இந்நிகழ்ச்சிக்கு பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர் அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்