குடிநீரை சேமிங்க தஞ்சாவூர் மாநகராட்சியில் இரண்டு நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.

1162

தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய குடிநீர் விநியோகம் மற்றும் பிரதான குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது, இக்குழாய்களை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்ஆர்விஎஸ் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீனிவாசபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சேவப்பநாயக்கன் வாரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பிரதாபசிம்மபுரம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுடன் இணைக்கும் பணி நடைபெற உள்ளதால் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வரும் 28,29 (திங்கள்,செவ்வாய்)ஆகிய 2 நாட்கள் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையாளர் ஜானகிஇரவீந்திரன் தெரிவித்துள்ளார், எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இச்செய்தியை தங்களது உறவினர்களுக்கும் பகிரவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 9 =