அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆர் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்று மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்று மறைந்தார் இந்நிலையில் இவரது 33ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது தஞ்சை ரயிலடியில் உள்ள எம்ஜி ஆரின் முழுஉருவ வெண்கல சிலைக்கு முன்னாள் எம்பி பரசுராமன் தலைமையில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம் ஆவின் தலைவர் காந்தி பகுதி செயலாளர்கள் அறிவுடை நம்பி மெடிக்கல் சரவணன் புண்ணியமூர்த்தி ரமேஷ் சண்முகபிரபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மெளன அஞ்சலி செய்தனர்