பொங்கல் பண்டிகைக்கு ரூ 2500 தமிழக முதல்வர் அறிவிப்பு

904

பொங்கல் பரிசாகக் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் இருந்து முதன்முதலாக தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.சில இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளைத் திறந்துவைத்தார்.பின்னர் எடப்பாடியில் பல இடங்களில் மினி வேனில் சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு பேசினார், அப்போது இதுவரை பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில், வரும் ஆண்டு 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.மேலும் ஜனவரி 4-ம் தேதி முதல் இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கும் என்று அறிவித்தார்.பச்சரிசி, சர்க்கரை 1 கிலோ, உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய்,முழுக்கரும்பு இவற்றுடன் நல்ல துணிப்பை ஒன்றும் கொடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

50 − = 43