தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் பாரம்பரிய கைவினைப் பொருள் கண்காட்சி

1897

தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் பாரம்பரிய கைவினைப் பொருள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார் தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைஞர்கள் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில் வருகிற ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி என்ற பெயரில் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்றது இக்கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார் இக்கண்காட்சியில் பஞ்சலோக சிலைகள் தஞ்சாவூர் கலைத்தட்டு  பித்தளை குத்துவிளக்குகள் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் பொய்க்கால் குதிரை செட் தஞ்சாவூர் ஓவியங்கள் தஞ்சாவூர் கிளாஸ் மற்றும் நெட்டி வேலைப்பாடுடன் கூடிய கலைப்பொருட்கள் களிமண் பொருட்கள் தஞ்சாவூர் கண்ணாடி ஓவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது மேலும் இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கைவினைப் பொருட்களுக்கு 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது இக்கண்காட்சி ஜனவரி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது இந்நிகழ்ச்சியில் பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

56 − 52 =