தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது,அரசு,அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது,அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டபடிப்பு பயிலும் பிவ-மிபிவ-சீம மாணவ-மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது முதுகலை,பாலிடெக்னிக்,தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ 2 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்,மாணவ-மாணவியர்கள் கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும்,கல்விநிறுவனங்கள் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை இனங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கும் கேட்புகளை சமர்பிப்பதற்கும் 10ந்தேதி முதல் 31.12.20 வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மேற்காணும் கால நிர்ணயத்துக்குள் சம்பந்தபட்ட கல்விநிறுவனங்கள் எவ்வித விடுதலின்றி புதுப்பித்தல் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும், மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.