முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் மாலை அணிவித்து மரியாதை

1030

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று சிறந்து விளங்கி அரசியலுக்கு வந்தார் பின்னர் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக கட்சியையும் முதல்வராக ஆட்சியையும் வழி நடத்தி வந்தார் கட்சி தொண்டர்களால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்டார், இந்நிலையில் உடல் நல குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ந் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து ஜெயலலிதாவின்  நான்காம் ஆண்டு நினைவு நாள் தஞ்சாவூரில் நடைபெற்றது.  தஞ்சை ரயிலடியில் உள்ள ஜெயலலிதாவின்  முழு உருவச்சிலைக்கு    முன்னாள் எம்பி பரசுராமன் தலைமையில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் பால்வளத் தலைவர் காந்தி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி மெடிக்கல் சரவணன் புண்ணியமூர்த்தி ரமேஷ் சண்முகபிரபு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர் இதில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்,இதைப்போல் முன்னாள் மேயர் சாவித்திரிகோபால் தெற்குவீதி பகுதியில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.