மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கண்டன ஆர்பாட்டம்.

1231


மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்தும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் கருப்பு கொடியேந்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது,மத்திய அரசு அண்மையில் வேளாண் திருத்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது,இச்சட்டத்தை கண்டித்து திமுக,கம்யூனிஸ்ட்,மற்றும் இயக்கங்கள் விவசாயிகள் என போராடி வருகின்றனர்,கடந்த ஒருவாரமாக பஞ்சாப்,ஹரியானா போன்ற மாநிலங்களிலிருந்து விவசாயிகள் டெல்லியில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்,வேளாண் சட்டத்தை எதிர்த்தும் தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சரும் எம்பியுமான பழநிமாணிக்கம், வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா முன்னிலையில் கருப்பு கொடியேந்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்,இந்த ஆர்பாட்டத்தில் எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன் டிகேஜி நீலமேகம், ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் காரல்மார்க்ஸ்,ஜித்து,சண்.ராமநாதன்,அஞ்சுகம்பூபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கொட்டும் மழையிலும் குடையை பிடித்தபடி கலந்து கொண்டனர்.