பஸ்ல இனி காசு இல்லாம பயணம் செய்யலாம்

1017


1800க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழ்அறிஞர்கள் மற்றும் எல்லைக்காவலர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள் ஆகியோரின் உதவியாளர் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்.
நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள் தமிழ்மொழி தமிழ்வளர்ச்சி(ம)தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள் மற்றும் எல்லைக்காவலர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள் ஆகியோர்களுக்கு (1836நபர்கள்)தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழக பேருந்துகளில் தமிழகம் முழுவதும் கட்டணமில்லாமல் பயணம் செய்திட அனுமதி வழங்கப்பட்டு பேருந்துகளில் பயணம் செய்து வருகிறார்கள், இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள் தமிழறிஞர்கள் மற்றும் எல்லைக்காவலர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள் ஆகியோர்கள் வயது முதிர்வு காரணமாக தனியாக பயணம் செய்திட இயலாத நிலையில் உடன் பயணிக்கும் உதவியாளருக்கும் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகை வேண்டும் என்று கோரிக்கையின் அடிப்படையில் போக்குவரத்து துறை மானிய கோரிக்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழறிஞர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள் மற்றும் எல்லைக்காவலர்கள் அவர்தம் வாரிசுதாரர்கள் உடன் செல்லும் உதவியாளர் ஒருவருக்கு கட்டணமில்லா பயண அட்டை வழங்கப்படும் என அறிவித்தார்கள்,அதனடிப்படையில் தமிழ் வளர்ச்சி துறையின் மூலம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசுப்போக்குவரத்து கழகங்களை அணுகி விபரங்களை சமர்ப்பித்து அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளிலும் தமிழகம் முழுவதும் கட்டணமில்லாமல் பயணம் செய்திட பயண அட்டையினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =