மத்திய அரசின் வேளாண்மை திருத்த சட்டத்தால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாகும் நிலை ஏற்படும் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

929

திமுக கட்சி சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் தொடங்கி தஞ்சை மாவட்டத்திற்கு கடந்த 25ந் தேதி வருகை தந்தார் அப்போது தமிழகத்தில் நிவர் புயல் அறிவிப்பால் தனது பிரச்சார பயணத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் 28ந் தேதி தஞ்சையிலிருந்து பிரச்சார பயணம் தொடரும் என்று அறிவித்தார் அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பிரச்சார பயணம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் தஞ்சையை அடுத்த தென்னமநாட்டில் விவசாயிகளுடன் கலந்துரையாடினார் அப்போது அவர் பேசும் போது விவசாயிகளின் கோரிக்கைகள் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் அதிமுக வேளாண்மை திருத்தசட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து பின்னர் பாஜகவிற்கு ஆதரவாக அதிமுக எம்பிக்கள் வாக்களித்தனர் என்று தெரிவித்தார் முன்னதாக பேசிய விவசாயிகள் கடந்த திமுக ஆட்சியில் கடைமடை வரை தண்ணீர் கிடைத்தது முன்னாள் அமைச்சர் பழநிமாணிக்கம் முயற்சியால் ரூ 1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கல்லணை கால்வாய் புனரமைப்பு பணி நடைபெற்றது தற்போது அதிமுக ஆட்சியில் அந்த பணி முழுமையடையவில்லை என்றும் தற்போது கரும்புக்கான நிலுவைத் தொகை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர் முன்னதாக தஞ்சைக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினை முன்னாள் அமைச்சரும் எம்பியுமான பழநிமாணிக்கம் எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர் அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அதிராம்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சார பயணம் மேற்கொண்டார்