திமுக கட்சி சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி நாகை தஞ்சாவூர் என பிரச்சார பயணம் மேற்கொண்டார் இந்த பிரச்சார பயணத்திற்கு அனுமதி மறுத்து காவல்துறையினரால் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார் அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திற்கு பிரச்சார பயணம் மேற்கொண்ட அவர் தஞ்சாவூரில் வணிகர்களுடன் கலந்துரையாடினார் பின்னர் இளைஞரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அப்போது பேசிய அவர் திமுகவில் தற்போது சுமார் 3 லட்சம் இளைஞரணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் திமுக விற்கு மக்கள் ஆதரவாக உள்ளனர் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் நிவர் புயல் காரணமாக தனது பயணத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் வரும் 28ந் தேதி முதல் தஞ்சையிலிருந்து தனது பிரச்சார பயணத்தை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள் துரை சந்திரசேகரன் ஏனாதி பாலு எம்எல்ஏ டிகேஜி நீலமேகம் நிர்வாகிகள் சன் ராமநாதன் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்