தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் உறுதி

1140

அதிமுக கட்சி சார்பில் தஞ்சாவூரில் வாக்காளர் சேர்த்தல் நீக்கல் திருத்தல் குறித்தும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைத்தது குறித்தும் பூத் மகளிர் குழு அமைப்பது குறித்தும் தேர்தல் பணி குறித்தும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் எம்பியுமான வைத்திலிங்கம் கலந்துகொண்டு தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை தெரிவித்தார் அப்போது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அதிமுக அரசு சிறப்பாக செய்து வருகிறது நான்கு வருடத்தில் சோதனைகளை சாதனைகளாக்கி நல்லாட்சி செய்து வருகிறது மருத்துவக் கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கி மருத்துவ மாணவர்களின் கனவை அரசு நிறைவேற்றியுள்ளது என்றும் தமிழ்நாட்டில் மீண்டும் மூன்றாவது முறையாக தமிழக வரலாற்றில் ஒரு இயக்கம் ஆட்சிக்கு வந்தது என்பதை நிரூபிப்போம் என்றும் தெரிவித்தார் மேலும் நிர்வாகிகள் பூத் மகளிர் குழுக்களை அமைக்க வேண்டும் புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் இரட்டை வாக்காளர்களை நீக்க வேண்டும் என்றும் 2021ல் அதிமுக ஆட்சி இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து கட்சியினர் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் இந்நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம் ஆவின் தலைவர் காந்தி முன்னாள் எம்பி பரசுராமன் எம்எல்ஏ சேகர் மற்றும் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி மெடிக்கல் சரவணன் புண்ணியமூர்த்தி ரமேஷ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்