ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு புத்தாடை, ஐஸ்கிரீம் வழங்கி நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்து நூதன விழிப்புணர்வு

65

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் மாநகர போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர், அப்போது அந்த சாலையில்  ஹெல்மெட் அணிந்து வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளை போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் தடுத்து  நிறுத்தி அவர்களிடம் சிரித்தபடி  கூல்டிரிங்ஸ், ஐஸ்கிரீம், பழம் மற்றும் புதிய வேஷ்டி, சட்டை ஆகியவற்றை வழங்கி நண்பர்கள் தின வாழ்த்துக்களை  கூறி அனுப்பி வைத்தனர்.இதனை எதிர்பார்க்காத வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு நன்றி கூறினர்,ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு அன்று  ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடி வரும் நிலையில்  காவல்துறையினர் உங்கள் நண்பன் என்ற வகையில் போக்குவரத்து போலீசார் இந்த நூதன ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஜோதி தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஈடுபட்டனர், இந்நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன செயலாளர் பிரபுராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்