உலக மகளிர்தின விழா ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது,மகளிர் தின விழாவில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது சமூகநலத்துறை சார்பில் தமிழக முதல்வரால் ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம்,சான்றிதழ் மற்றும் சால்வை ஆகியவை வழங்கப்படுகிறது, இவ்விருதுக்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டு, 18வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்,சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண்குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி,இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும்,தங்களது கையேட்டில் பொருளடக்கம், பயோடேட்டா, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ,சுயசரிதை மற்றும் உலகளாவிய விருதுகள் பெற்றிருப்பின் அதன் விபரம்,சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை,பயனாளிகளின் விபரம் உள்ளிட்டவைகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முழுமையாக பூர்த்தி செய்து தட்டச்சு செய்து இரண்டு நகல் அனுப்பவேண்டும்,மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர் அறைஎண்:303, 3வது மாடி,ஆட்சியர் அலுவலகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.







































Users Today : 4
Users Yesterday : 0
Total Users : 34328
Views Today : 10
Views Yesterday :
Total views : 65296
Who's Online : 0




