தஞ்சாவூரில் டாட்டா குழுமத்தின் ஒரு அங்கமாக செயல்படும் தனிஷ்க் ஜுவல்லரி நிறுவனம் பழைய தங்க நகைகளை புதிய நகைகளாக மாற்றும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது,
இதையடுத்து தஞ்சாவூரில் வணிக மேலாளர் ரத்திஷ் மற்றும் நிறுவன மேலாளர் தினேஷ் கூறுகையில், . இந்தியாவில் உள்ள வீடுகளில் மட்டும் 25 ஆயிரம் டன்கள் தங்கம் இருப்பதாகவும், அந்த சொத்து மதிப்பும் வீடுகளுக்குள்ளேயே வேறு ஆதாய பலன்களை வழங்காமல் பூட்டி வைக்கப்பட்டிருக்கின்றன, இந்தியாவின் தேவையில் ஏறக்குறைய 99 சதவீதம் தங்கம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது, தங்க ஆபரணங்களின் மதிப்பை வெளிக் கொணரும் வகையில் தனிஷ்க் நிறுவனம் பழைய நகைகளை மாற்றி புதிய நகைகளாக மாற்றுவதற்கு 0 சதவீதம் எக்ஸ்சேஞ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் 9 கேரட் அளவு வரை அக்டோபர் 21 ஆம் தேதி வரை
நடைபெறும், இதன் மூலம் தங்கம் இறக்குமதி அளவை குறைக்க முடியும், நமது நாட்டை சுய சார்புள்ளதாக மாற்றவும் முடியும் என்று கூறினர்
