தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் குறைந்த இரத்த அழுத்தம் இருந்த சிறுநீரக நோயாளிக்கு CRRT டயாலிசிஸ் மூலம் சாதனை

74

மதுப்பழக்கம், புகைபிடித்தல் பழக்கமுள்ள 40 வயது நோயாளி ஒருவர் மோசமான உடல் நிலையில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,அதிகமான கிரியாட்டினைன், இரத்த அழுத்தமும் மிகக்குறைவாக (60 mmHg) அவருக்கு இருந்தது, திடீரென்று ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பை சிறுநீரக தொடர் மாற்று சிகிச்சை முறை மூலம் இந்த  மருத்துவமனை சரி செய்திருக்கிறது (CRRT). இது மெதுவான ஆனால் சீரான டயாலிசிஸ் முறையாகும். நீர்ச்சத்து, எலெட்ரோலைட் சமமின்மை பிரச்சனை உள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு உகந்த சிகிச்சை இதுவாகும். இதுகுறித்துப் சிறுநீரகவியல் துறை மருத்துவர் கெளரி சங்கர் கூறுகையில், நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மோசமான உடல் நிலையுடன் இருந்தார். அவரது இரத்த அழுத்தம், 60 mmHg என்ற நிலையில் இருந்தது. சிறுநீரகங்கள் முழுமையாக செயலிழந்துவிட்டன. சிறுநீர் பிரியவே இல்லை. அவரது இதயம் செயல்படுவதற்காக இரண்டு இன்ரோப் மருந்துகள் அளிக்கப்பட்டன. உடனடியாக அவரது இரத்த அழுத்தம் சீரானது. சுவாசத்துக்கான சிகிச்சை நடைமுறைகளும் வழங்கப்பட்டன. மேலும் உடலின் நீர்ச்சத்தும் எலெக்ட்ரோலைட் சமநிலையும் சீராக்கப்பட்டன.இந்த அதிநவீன சுத்திகரிப்பு நடைமுறை, திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட, சீரற்ற இரத்த ஓட்டம் உடைய நோயாளிகளுக்காகவே உருவாக்கப்பட்டதாகும். அதேபோல இரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்கள், கழிவுகளை அகற்றவும் இது பயன்படுத்தப்படுகிறது என்று கூறினார், இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் செந்தில்குமார், பிரவின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்