தஞ்சையில் 25 சிறுநீரக உறுப்பு மாற்று சிகிச்சைகள் செய்து மீனாட்சி மருத்துவமனை சாதனை

417

டெல்டா பிராந்தியத்தில் புகழ்பெற்ற மருத்துவமனையாக சிறப்பான உயர் சிகிச்சையை வழங்கி வரும் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை அதன் வெற்றிகரமான 25-வது சிறுநீரக மாற்று சிகிச்சையை செய்து சாதனைப் படைத்திருக்கிறது. 37 வயதுள்ள ஒரு நோயாளிக்கு அவரது மனைவியிடமிருந்து தானமாகப் பெற்ற சிறுநீரகத்தைக் கொண்டு இச்சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ்  NABH – ன் அங்கீகாரம் பெற்றிருக்கும் இந்த  மருத்துவமனையில் செய்த முதல் சிறுநீரக உறுப்புமாற்று அறுவைசிகிச்சை இது என்ற பெருமையையும் இதன் மூலம் இம்மருத்துவமனை பெற்றிருக்கிறது. மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறையின் நிபுணர் டாக்டர் கௌரி சங்கர் தலைமையிலான மருத்துவ நிபுணர்கள் குழுவில் சிறுநீர் பாதையியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் ரவிச்சந்திரன், இதய மார்பறை மற்றும் இரத்தநாள அறுவை சிகிச்சை துறையின் மூத்த நிபுணர் டாக்டர் சுரேஷ் பாபு, சிறுநீர் பாதையியல் துறையின் முதுநிலை மருத்துவர் டாக்டர் பிரவீன் மற்றும் மயக்கவியல் துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர் அரிமாணிக்கம் மற்றும் மயக்கவியல் துறையின் நிபுணர் டாக்டர். நாராயணன் ஆகியோர் இந்த சிகிச்சையில் இடம்பெற்றிருந்தனர்