தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் அரிய வகை எலும்பு குறைபாடு கொண்ட சிறுவனுக்கு வெற்றிகரமான கழுத்து-தண்டுவட அறுவைசிகிச்சை

11

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், நான்கு வயது சிறுவனுக்கு மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். கழுத்து எலும்பு கடுமையாக விலகி தண்டுவடத்தை அழுத்தியதால், அச்சிறுவனின் இரு கைகள் மற்றும் கால்கள் செயலிழந்த நிலையில் இருந்தன.அதனை இந்த அறுவை   சிகிச்சையின் மூலம் சரிசெய்து தண்டுவட அழுத்தத்தை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர். கழுத்து-தண்டுவடத்தின் மேற்பகுதியில் ஸ்க்ரூ பொருத்துதல் (OCTSF) என அழைக்கப்படும்; இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சையை, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் அருண்குமார் மற்றும் டாக்டர் கவீஸ் ஆகியோர் மேற்கொண்டனர். மயக்க மருந்து நிபுணர்கள் டாக்டர் அரிமாணிக்கம் மற்றும் டாக்டர் வினோதா தேவி ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய தீவிர சிகிச்சைப் பராமரிப்பை டாக்டர் ஷோபனா தேவி மற்றும் டாக்டர் சிவக்குமார் ஆகியோர் கவனித்துக் கொண்டனர். குழந்தை நல மருத்துவர் டாக்டர் அப்துல் ரஹ்மான் இச்சிறுவனுக்கான சிகிச்சை செயல்பாட்டிலும், குணமடைந்து கைகால் இயக்கத்தை திரும்பப் பெறுவதிலும் குறிப்பிடத்தக்க பங்காற்றினார், இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பிரவீன் உடனிருந்தார்